மலேசிய MH 17 விமானத்தை வீழ்த்திய ஏவுகணை இயந்திரம் அடையாளம் காணப்பட்டது



மலேசிய MH 17 பயணிகள் விமானம் உக்ரைனுக்கு மேலாக சென்றவேளை 2014 ஆம் ஆண்டு சிலை மாதம் 17 ஆம் திகதி ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளாகி விழுந்து நொருங்கியதுடன் அதில் பயணிகள் அனைவரும் கொல்லபட்டனர்.

சில வாரங்களுக்கு முன்னர் மலேசிய MH 17 விமானம் குறித்து BBC செய்தி ஒன்றை வெளியிட்டது. அதில் உக்கிரைன் போர் விமானங்களே MH17 சுட்டு வீழ்த்தியது என்ற தகவலை வெளியிட்டிருந்தது.

இச்செய்தி வெளியாகி அதன் பரபரப்பு அடங்கும் முன்னரே இப்போது இந்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது கிரைமியா மாநிலத்தில் உள்ள நகரும் ஏவுகணைத் தளத்தில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை மூலம் வீழ்த்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் ரஷ்யாவின் 53 வது வான் காப்பு படைப்பிரிவின் “பக் ஏவுகணை தளம்” தற்போது உக்கிரைனில் உள்ள கிளர்சிப் படையிடம் உள்ளது என்றும். அதனை நேரில் கண்ட சிலர் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

யுத்த தாங்கி போலவே காட்சியளிக்கும் இந்த நகரும் ஏவுகணைத் தளம் அதி தொழில் நுட்பவசதியும், வானில் பறக்கும் விமானங்களை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டதாகும்.

உக்கிரைனின் கிரைமியா மாநிலத்தை கைப்பற்றிய ரஷ்யா அதனை தனது நாட்டோடு இணைக்கும் முயற்சியில்ஈடுபட்டுள்ள நிலையில் அங்கு ரஷ்யாவுக்கு ஆதரவான படை ஒன்றை ரஷ்ய அதிபர் புட்டின் உருவாக்கி பல நவீன ஆயுதங்களையும் வழங்கியுள்ளார்.

தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி ரஷ்யாவுக்கு ஆதரவான படையினரே மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக கூறப்படுகின்றது.


Post a Comment

0 Comments